Monday, 28 March 2016

தர்மம் தலை காக்கும்!!!

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.


அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.

யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.

அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.

லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.
பின்தொடர்ந்த நாய் மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.அர்ச்சுனன் வீழ்ந்தான்.சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.
அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியதுஎன்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.

தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான். உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.

ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லைஎன்று கூறித் தடுத்தான் இந்திரன்.

விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்என்றான்.
அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்என்று கூறி தரும தேவன் மறைந்தார்.      
     
        நீதியானது;       எந்தச் சூழ்நிலையிலும் நீதி வழுவாது இருந்தால் சொர்க்கம் நிச்சயம்

Thursday, 24 March 2016

No TEAR when No FEAR


Most often, our lives are wasted in fear!

In order to drive away darkness from his house, one man was found carrying out bucketloads of darkness and emptying them — a futile task. His preoccupation with driving out darkness took him nowhere. Darkness is absence of light. If only he had attempted to light a small lamp, darkness would have disappeared!

Fear is like darkness. Absence of love is fear. Once the lamp of love is lit, fear would disappear. How does love blossom between a man and a woman, for example? Love is born out of trust. If two individuals don't trust each other, there can be no love or affection between them.

Here's a Sufi story: Mullah Nasruddin was married just that morning. The same night, he and his wife were travelling in a boat across a river, along with their relatives. Suddenly, a storm broke out, making the river turbulent. The boat was rocking wildly. Everyone including the bride was full of fear. But Mullah Nasruddin remained calm. The surprised bride asked, "Aren't you afraid?" Mullah, without replying, took out a dagger from his waistband and raised it as though he was going to slit her throat. There was no reaction on her face. He asked, "Are you not afraid of the dagger?" and she said, "The dagger could be dangerous, but the person who is holding it, is my loving husband. So i am not afraid." "Exactly!" exclaimed Mullah. "These waves may be dangerous but Allah who is moving them is full of love. So i am not afraid!"

Mullah Nasruddin had implicit faith in Allah. Hence, he was loving and compassionate. Without love and compassion even Mullah would have trembled with fright, just like others in the boat.
If we are afraid, it only means that we do not trust existence. We would have come across many who say, 'I am God-fearing!' This is nonsense. We should love God, not fear Him. It should be 'God loving', not 'God fearing'.


Swami Vivekananda said, "Be fearless. Fearlessness is the message of the Upanishads." Some go from one astrologer to another with their horoscopes to find out when death would strike them. To them, horoscopes are 'horrorscopes'. They are more afraid of when they would die rather than what they would do while alive. This fear could devastate them both mentally and physically.


While talking about mortal fear, Rabindranath Tagore said, "Long before you were born in this world, compassionately, God made sure that there was milk in your mother's breast. So, have faith."


Those of you who are afraid... plan for your future; there is no harm in that. But when you fear the future, it will ruin your happiness. In order to protect your wealth, plan where to keep it safe; plan how to insure it against theft. ¦To live in fear, without doing any of these things is meaningless.



Instead of conjuring fearful images like 'What if i fail in the examination?'— and thus spending time weakening yourself, use it fruitfully to prepare and pass the examination. Life is a series of examinations; we need to pass them with flying colours. This is a gift we can offer to God. Faith does not crave for miracles. But it often happens miraculously. Faith does not move mountains but gives the power to climb one. Help is just a prayer's length away. Good understanding is better than silver or gold. So experience the richness of love and fearlessness.

Monday, 14 March 2016

Kaaradaiyaan Nombu ( Savithri Vradam)

KAARADAIYAAN NOMBU
“Kaaradaiyaan Nombu” which is also known as “Savithri Nombu”, is a tamilian festival where as per Hindu mythology, a married woman prays for the well being and long life of her husband. It has been celebrated on a particular day when the transition between two tamil months of “Maasi” and “Panguni” takes place. It is observed at the exact time when the Tamil month of Massi ends and the month of Panguni begins. Ladies will be in fasting till the transition time, break the fast by eating the Karadai preparation with butter and then wear the Kaaradai nombu saradu, which is a yellow thread, around the neck.

Karadaiyan Nombu is observed in remembrance of the Satyvan – Savitri legend.










The story of Savithri is mentioned in the Mahabharatha as a conversation between Markandeya and King Yudhistra. The oldest known version of the story of Satyavan and Savithri is found in “Aranya Parva” of the MAhabharatha. This story is told by Markendeya when King Yudhistra asks whether there has ever been a woman whose devotion matched Draupadi’s devotion, love and reality to her husband. Then Markandeya replies with the story of Savithri.
Savithri was the daughterof the King Asrapathi.When her father asked her who she wished to marry she pointed to Sathyavanwho lived in the forest.Despite being warned by Narada that he would die within a year of marriage,she married sathayavan. 
Impressed by Satyavan’s devotion towards his blind parents, Savitri decides to marry him. On enquiry, the King found out from Sage Narada that Satyavan was the son of a deposed king and that he was destined to die in a year.

King first refused to the marriage but Savitri was adamant. Finally, the King relented and the marriage was conducted and the couple left for the forest. 

They led a happy life and soon a year passed and Savitri realized that Satyavan would die any moment. So she kept fast and always followed him. .Her offerings were durwa grass and peepal leaves.She performed neivedhyam with wild rice and toor dal. that is kaara arisi and thuvaram parrupu that is why this vratham is known as karadayan nonbu.



Next day, she followed Satyavan to the forest. While cutting woods, he fell down and fainted. Soon, Savitri realized that Satyavan is dying. Suddenly she felt the presence of Yama, the god of death. She saw him carrying the soul of Satyavan and she followed Yama.

Yama first ignored Savitri thinking that she will soon return back to her husband’s body. But she persisted and kept on following him. Yama tried few tricks to persuade her but nothing worked. Then Yama said that it is impossible for him to give back the dead as it is against the nature’s law. Instead, he will give her three boons.

Savitri agreed with the first boon she asked for a son for her father. With the second boon she asked that her in-laws be reinstated in their kingdom with full glory. 

Finally, for the third boon she asked ‘I would like to have children.’

Yama immediately said ‘granted.’ But soon Yama realized that he had been tricked by Savitri. 

Yama remained silent for a minute and then smiled and said ‘I appreciate you persistence. But what I liked more was you readiness to marry a man whom you loved even though you knew that he would only live for a year. So this karayadan nonbu protected her husband.

Prayers are offered to GowriDevi and women meditate on Savitiri and wear a yellow thread round their neckas they chant the following
The preparation is known as Karadai nombu adai - the festival takes its name from the unique Kara Adai dish. It is believed that Savitri cooked such a dish and offered it to Lord Yama along with unmelted butter as a sort of thanksgiving for sparing her husband’s life.
Significance of Karadaiyan Nombu:
Karadaiyan Nombu is a significant ritual that is mainly observed by married women in the southern states of Andhra Pradesh, Tamil Nadu, Kerala and Karnataka. The word ‘Karadai’ refers to ‘a special naivedya (holy dish) and ‘nombu’ signifies ‘upvasam or vratam’. The observance of Karadaiyan Nombu is done in remembrance of ‘Satyvan-Savitri’ story. According to the legends, Savitri was a princess who with her utmost devotion towards her husband, Satyvan, saved him from the clutches of death. This story is very popular in India and there are few other Hindu festivals based on this legend, such as ‘Vat Savitri Puja’. The festival of Karadaiyan Nombu is observed by married women for the prosperity and long life of their husbands whereas unmarried girls keep this observance to get their choice of husband.
Rituals during Karadaiyan Nombu:
  • Fasting or vratam is an important ritual on the day of Karadaiyan Nombu. Married women observe a fast from the time of getting up. The fast is broken after completing the puja rituals. Women break their vratam by eating the unique Karadai preparation with butter. The fast is broken anytime in the late afternoon or evening only when the transition occurs.
  • On Karadaiyan Nombu a special naivedya is prepared and is known as ‘Karadai Nombu Adai’. As per the mythological stories, it is stated that Savitri prepared this special dish and offered it with unmelted butter to Lord Yama, the Hindu God of Death, as a thanksgiving gesture for returning the life of her husband, Satyavan.
  • Women on this day worship Goddess Gowri and offer the Karadaiyan Nombu Naivedyam to please the Goddess. Special mantras are chanted at the time of offering the Karadai to Goddess Gowri. The puja of Karadaiyan Nombu is performed at the specific time when Massi month ends and the month of Panguni just begins.
  • Another significant ritual on Karadaiyan Nombu is wearing the yellow colored thread, referred as ‘Karadai Nombu Saradu’ around the neck. A small flower is also tied to this yellow thread. This thread is tied for the well-being of husbands.
        Women also decorate their houses with kolam on this day

 

Karadaiyan nonbu adai recipe


Ingredients

For sweet adai

Rice flour - 1 cup
Jaggery - 1 cup
Water - 2 cups
Coconut pieces - 3-4 tblsp
Karamani/ black eyed peas - 1/4 cup
Cardamom - 1, powdered

For salt adai
Rice -1 cup
coconut - 3-4 tblsp
Karamani - 1/4 cup
Salt - As needed
Oil - 1 tsp
Mustard - 3/4 tsp
Green chilli - 2 
Curry leaves - 1 sprig
Asafoetida - 2 generous pinches

Method

1.     Wash and soak rice for 1 or two hours. After soaking, drain water completely and spread it in a clean kitchen towel. 
2.     Mean while, roast karamani and 7 other grains(optional)– I used  channa, black urad, green moong, finger millet, red milltet, mocha kottai, dried peas . Roast until karamani starts golden and nice aroma wafts. Let the flame in medium flame.
3.     Soak in water until you do the other works.
4.     Now the rice flour, let the cloth absorb excess water. Say for 30 minutes. Grind it to a fine powder in a mixer. Sieve it and if you get more remains(coarse rice in the sieve) again powder it sieve to prevent wastage.
5.     This will yield 2 cups plus little more. So you can use it for this recipe. 1 cup flour for each, sweet and salt version. Boil 2 cups water in a heavy bottomed vessel, add jaggery and dissolve it completely. 
6.     Filter the jaggery to remove impurities in a metal strainer. Bring to boil again and add the karamani we soaked drained from water. Simmer the flame and add the flour in a sprinkled way. Mix it while you add briskly with other hand to avoid lump formation.  
  1. Continue stirring in a mashing way, to break the lumps if any. When it becomes a lump as in the picture below, switch off the flame. It takes some time, so keep stirring. When it forms lump, it may look sticky, but after cool down, it will stiffen.
  2. For salt version, heat a heavy bottomed pan with oil and season with mustard, green chillies, curry leaves, asafoetida. Add 2 cups water,mix salt to it. Bring to boil. You can add a pinch of asafoetida at this stage for extra flavour.
  3. Simmer the flame and add the rice flour little by little as you mix with the other hand. 
  4. Cook in medium flame, this will thicken soon than the sweet dough, so be prepared for that. When it forms as a lump, switch off the flame and transfer to another vessel.
  5. By now the sweet dough would have cooled down. Make equal sized balls, flatten in well greased hands and make a hole in the middle. When u make hole, dip the finger in sesame oil to make it easier. Arrange in plate/ idli plate.
  6. Repeat the same for salt version and make equal size balls and flatten in well greased hands, make a hole in the middle. Arrange in greased idli plate and steam for 5-8 minutes.
Notes
    • You can use store bough rice flour also for this preparation.
    • Make sure you reduce the flame when you add flour and keep stirring to avoid lumps in the dough. If few lumps are there, it will break as we keep stirring, no need to worry.
    • Roasting karamani adds a great flavour, not only that, it also makes it cook easily. The longer it gets soaked, it will easily get cooked and be soft in the adai.
    • If you want, you can even boil the karamani to cook it before adding.
    • Keep the prepared dough covered, as it will become dry while cooling down.
    • It it is too dry, sprinkle water while you make adai. Otherwise the edges will be cracked.
    • You can add grated coconut in place of chopped coconut, both has its own texture and taste.
    • Longer the time you soak karamani, sooner and soft it will get cooked in the adai.
    • The sweet dough takes longer time to get stiff. So keep stirring.
    • You can add finely chopped ginger in salt adai while tempering…

We offer with butter(urugaadha vennai) and it does tastes best with it :) 



Thursday, 10 March 2016

"சாப்பாட்டுராமா!"

சாப்பாட்டில் அதிகம் விருப்பம் உள்ளவர்களை "சாப்பாட்டுராமா!" என கேலி செய்வதுண்டு.
ஸ்ரீ ராமருக்கு இந்த சாப்பாட்டுராமன் என்ற பெயர் எப்படி வந்தது?
இலங்கையில் போர் முடிந்து ராவணனை வதம் செய்தபின் ஸ்ரீ ராமர் சீதை லஷ்மணர் சுக்ரீவர் விபீஷணர் மற்றும் வானரப்படைகளுடன் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், அயோத்திக்கு செல்லு முன்பாக பரதவாஜ முனிவரை தரிசிக்க விரும்பினார்.
ஆனால் அயோத்திக்குச் செல்ல நேரம் தாமதமானால் பரதன் தீமூட்டி அதில் தான் விழுந்துவிடுவதாய் சொன்னதை நினைத்துப் பார்த்தார். 14 ஆண்டுகள் முடிந்த உடனேயே அண்ணன் வராவிடில் தான் தீயில் விழுந்து மாண்டுவிடுவதாக முன்னமே பரதன் சொல்லி இருந்தான். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் அறிவார். ஆனாலும் பரத்வாஜ முனிவரை தரிசிக்காமல் செல்ல மனமுமில்லை. முனிவரை விரைந்து சென்று தரிசித்து பின் அயோத்தி செல்ல முடிவுசெய்தார். பரத்வாஜமுனிவர் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டியயும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.
”இரவாணனை வெற்றிகொண்ட ஸ்ரீராமா! என் ஆஸ்ரமத்திற்கு நீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று இரவு இங்கே தங்கிவிட்டு நாளை இங்கு நடக்கும் ததீயாராதனையில் கலந்துகொண்டு (திருமாலடியார்க்கிடும் விருந்துணவு) உணவு உண்டு செல்ல வேண்டும்”என்று கேட்டுக்கொண்டார். ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதே நேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார்.ஆகவே அனுமனை அழைத்தார்.
”அஞ்சனைகுமாரனே !என் அருமை பக்தனே! எனக்காக நீ பரதனிடம் சென்று நான் எல்லோருடனும் வந்துகொண்டிருப்பதை சொல்லி விட்டுவா.வாயு புத்திரனான நீ இதை காற்றாய் ஓடிச்சென்று முடித்து உடன் இங்குவரவேண்டும்”. அனுமன் அண்ணல் சொன்ன சொல்லை நிறைவேற்ற இறைப்பொழுதில் அங்கிருந்து அகன்றான்.
மறுநாள்...
விருந்திற்காக இலையினைப் போட்டார் முனிவர் பெருமான். அனைவரும் அமர்ந்துவிட்டனர். அனுமன் பரதனை சந்தித்துவிட்டு வந்துவிட்டான் அனுமன் விருந்துக்குவருவாரென முனிவர் நினைக்கவில்லை.அனுமனுக்கு இலை எதுவும் காலி இல்லை. ராமன் அன்புடன்.அனுமனை தன் இலைக்கு எதிர்ப்புறம் அமரச்சொல்கிறார். அனுமன் காய் பழங்களைத்தான் உண்பார் என ராமருக்குத்தெரியும் ஆகவே பரிமாறுபவர்களிடம் இலையின் மேல்பக்கத்தில்(அனுமன் அமர்ந்த திசையில் அல்லது அவருக்கு அருகிலிருந்த இடத்தில்) காய் பழங்களைபரிமாரச்சொல்கிறார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் போட சொல்கிறார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடிக்கின்றனர். சாப்பாட்டிற்காக முனிவர் கேட்டுக்கொண்டார் என்று தன் பயணத்தின் இடையே தங்கி சாப்பாட்டினை முடித்துக் கொண்டதால் ராமர் சாப்பாட்டு ராமன் ஆகிறார் ..அப்படியே காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டது.